2025 மே 01, வியாழக்கிழமை

ஆசிரியர் சங்கத்தின் 57ஆவது பேராளர் மாநாடு

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
'போலியான கல்வி அபிவிருத்திக்காக பிள்ளைகளையும், ஆசிரியர்களையும், அதிபர்களையும் அழுத்தத்திற்கு ஆளாக்காதே  என்ற தொனிபொருளில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 57 ஆவது பேராளர் மாநாடு வெள்ளிக்கழமை(27) காலி மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் ஆகியோரின் பிரச்சினைகளையும், பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளையும் நாட்டின் சமகாலப் பிரச்சினைகளையும் ஆராய்ந்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவுள்ளோம் என்று மாநாடு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 57 ஆவது பேராளர் மாநாட்டின் தலைமைகளாக தலைவர் எஸ்.பி.பெர்னாண்டோ, உபதலைவர்களான ரத்தினம் ரவீந்திரன், சி.ஜயதுங்க, அபாஜுல் இர்பான், ரசிகா ஹதபான்கொட ஆகியோர் பங்கெடுக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .