2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் கட்அவுட் விழுந்ததில் 6 பெண்கள் காயம்

Kanagaraj   / 2014 டிசெம்பர் 19 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஹிஸ்புல்லா அரங்கை சுற்றி கட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் தாங்கிய பாரிய கட்அவுட்டுகளில் ஒன்று சரிந்து விழுந்ததில் பெண்கள் அறுவர் காயமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் மீதே இந்த கட்அவுட் சரிந்து விழுந்துள்ளது.

அங்கு வீசிய பலத்த காற்றும் அதனோடு பெய்த கடும் மழையை அடுத்தே பாரிய கட்அவுட் கழன்று விழுந்துள்ளது.

காயமடைந்த பெண்களை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நான்கு பேரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றபோதிலும் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றிவிட்டு அடுத்த கூட்டத்துக்காக சென்றுவிட்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X