2025 மே 03, சனிக்கிழமை

காத்தான்குடியில் 14 டெங்கு நோயாளர்கள்

Kogilavani   / 2014 மார்ச் 10 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் கடந்த 15 தினங்களுக்குள் 14 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி விடுதி வீதி மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி பகுதிகளிலேயே இந்த டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் காத்தான்குடி நகரசபையுடன் இணைந்து இதை கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் புகை விசிறிதல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை என்பனவும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் டெங்கு நோய் குறித்து பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும்' என அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X