2026 மே 06, புதன்கிழமை

மினி சூறாவளியினால் 15 பேர் பாதிப்பு

Super User   / 2013 மே 14 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மினி சூறாவளி தாக்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 வீடுகள் பகுதியளவு சேதமடைந்ததுடன் 3 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணி;ப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 3 வீடுகள் பகுதியளவு சேதமடைந்ததுடன் 3 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய சுழல் காற்றினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சேத விபரங்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிக்கையிடுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்சின் ஆலோசனைக்கு அமைவாக சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து மாத்திரமே இதன் சேத விபரங்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .