2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திவிநெகும பயனாளிகளுக்கு 2,500 ரூபாய் நிதி

Gavitha   / 2014 நவம்பர் 09 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

திவிநெகும பயனாளிகள் அனைவருக்கும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர், அவர் தம் வீடுகளை திருத்திக்கொள்வதற்காக 2,500 ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளா தெரிவித்தார்.

அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்தர் சங்கத்தின் ஏற்பாட்டில், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான வருடாந்த மாநாடு சனிக்கிழமை (08) மட்டக்களப்பு மஹஐன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டம் வறுமை கூடிய மாவட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான உத்தியோகஸ்தர்கள் கடமைபுரிக்கின்றனர். முதலில் தனி நபர் வறுமையை போக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அடுத்து குடும்ப வறுமையை போக்குதல் வேண்டும். அடுத்த கட்டமாக கிராம மட்டத்தில் வறுமையை இல்லாமல் செய்ய, நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் கடமை புரிய வேண்டும்.

வறுமையை போக்க திவிநெகும திட்டத்துக்காக ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ கணிசமான அளவு நிதியை, எமது பொருளாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளார்கள். இதற்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றது மற்றும் பல்வேறு கட்டுமானப்பணிகளில் நாடு பல்வேறு முன்னேற்றம் கண்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்கும் இவ்வாறான திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதும் உங்கள் அனைவரினதும் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X