2026 மே 07, வியாழக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 3000 பட்டதாரிகளுக்கு வேலையில்லை: ரி.தயாரூபன்

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்
)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பைப்பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நாங்கள் 'லங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தில் இணைந்துள்ளதாக கல்குடா ஸ்ரீ லங்கா சுதந்திர பட்டதாரிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் ரி.தயாரூபன் தெரிவித்தார்.

இன்று காலை ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் அமைப்பினால் மட்டக்களப்பு விபுலானந்தா படிப்பகத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் சுமார் 200 பட்டதாரிகள் இம்மாநாட்டில் பங்கு கொண்டனர். மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளும் இச்சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .