2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நீலப்படை அணியில் 400 தமிழ் இளைஞர், யுவதிகள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான நீலப்படை அணியில் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள  400 தமிழ், இளைஞர் யுவதிகள் இணைந்துகொண்டதாக  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

செங்கலடி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி  அலுவலகத்தில்  திங்கட்கிழமை (01) மாலை நடைபெற்ற நீலப்படை அணி அங்குரார்ப்பண நிகழ்வின்போது, இவர்கள் இணைந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X