2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4035 வீடுகள் பாதிப்பு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

 
கடந்த ஒரு வர காலத்துக்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து வரும் சீரற்ற கால நிலை காரணமாக 4035 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய வெள்ள அனர்த்த அறிக்கை தெரிவிக்கின்றது.

நேற்று மாலைவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்புக்களின் படி 1261 வீடுகள் முழுமையான சேதமடைந்துள்ளதுடன் 2774 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இவற்றில் அதிகமான வீடுகள் ஏறாவூர் பற்றிலேயே பாதிக்கப்பட்டுள்ளன. 211 கிராம சேவையாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் உள்ள 51,379 குடும்பங்களை சேர்ந்த 190,966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த அனர்த்தங்களின்போது இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்தும், இரண்டுபேர் காணாமல்போயுமுள்ளனர்.
 
அத்துடன் அனர்த்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 34 இடைத்தங்கல் முகாம்களில் 3459 குடும்பங்களை சேர்ந்த 11530 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

உறவினர் நண்பர்களின் வீடுகளில் 14,323 குடும்பங்களை சேர்ந்த 51,770 பேர் தங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X