2026 மே 14, வியாழக்கிழமை

கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 10 இலட்சம் ரூபாய் நிதியெதுக்கீடு

Super User   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ஜிப்ரான்)

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டு. கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் அபிவிருத்திக்காக சிறுவர் விவகார மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 10 இலட்சம் ரூபாய் நிதியெதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதி;பர் கே.ரவீந்திரமூர்த்தி தெரிவித்தார்.

பாடசாலையின் ஒரு தொகுதி சுற்று மதில் அமைப்பதற்காகவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளதாகவும் அதிபர் ரவீந்திரமூர்த்தி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .