2026 மே 07, வியாழக்கிழமை

'மட்.போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சைக்கூடம் 10 நாட்களுக்கு மூடப்படும்'

Kogilavani   / 2013 ஜூன் 09 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்
, எம்.எஸ்.எம்.நூர்தீன்

திருத்த வேலைகள் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் பத்து நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் க.முருகானந்தன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'எதிர்வரும் 13 ஆம் திகதி முதல்; 24 ஆம் திகதி வரை இக்கூடம் மூடப்படவுள்ளது.

இதன் காரணமாக பல மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சாதாரண காயங்களுக்கு உட்படும் நோயாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை காது, மூக்கு, தொண்டை சத்திர சிகிச்சைக் கூடம் பயன்படுத்தப்படவுள்ளது.

அவசர முறிவு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நோயாளர்கள் அம்பாறை, பொலனறுவை மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

மகப்பேற்று சத்திர சிகிச்சைகள் அனைத்தும் வழமை போன்று மகப்பேற்று சத்திர சிகிச்சை நிலையத்தில் நடைபெறும்.
பிரதான சத்திர சிகிச்சை கூடம் மூடப்படவுள்ள பத்து நாட்களிலும் நோயாளர்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .