2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கோறளைப்பற்றிலுள்ள 10 அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 நவம்பர் 16 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்


கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், பள்ளிவாயல்கள் உட்பட 10 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ்வினால் வெள்ளிக்கிழமை (14) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ், 4 இலட்சத்து 12 ஆயிரத்து 250 ரூபாய் நிதியிலேயே இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்திய வாழைச்சேனை பிரதேச செயலகத்தின், பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் தலைமையில், பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கோறளைப்பற்று மத்திய வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், பிரதியமைச்சரின் வாழைச்சேனை பிரதேச இணைப்பாளர் என்.எம்.கஸ்ஸாலி உட்பட பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X