2026 மே 09, சனிக்கிழமை

dd

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 10 பேர் காத்தான்குடியில் கைது

A.P.Mathan   / 2013 ஜூன் 12 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், தேவ அச்சுதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு தயாராகவிருந்த 10 இளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் இன்று புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர். இவர்களுடன் இவர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கு தயார்படுத்திய காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 தொடக்கம் 35 வயதுக்கும் உட்பட்ட ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காத்தான்குடி கடற்கரை ஓரத்திலுள்ள வீடொன்றில் பயணத்துக்கு ஆயத்தமாக தங்கியிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .