2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நாட்டில் நாளொன்று 112 விபத்துக்கள் இடம்பெறுகின்றன: அறுவர் மரணிக்கின்றனர்

Kanagaraj   / 2014 மார்ச் 15 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ,கே.றஹ்மத்துல்லா

இலங்கையில் தினமும் வீதி விபத்துக்கள் 112 இடம்பெறுகின்றன. இதனால் 06 தொடக்கம் 07 பேர் மரணித்தும், 55 பேர் காயமடைந்தும் வருகின்றனர். இதற்கான செலவீனமாக அரசாங்கம் வருடாந்தம் 15 பில்லியன் ரூபாய்க்களை உதவி வருகின்றது என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹாஜா முகைதீன் தெரிவித்தார்.

'வீதி விபத்துக்களை தடுப்போம்' எனும் விளிப்புனர்வு கருத்தரங்கு அக்கரைப்பற்று 12ம் பிரிவு கிராமிய சிவில் பாதுகாப்பு குழு மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் என்பன அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவுடன் இணைந்து நடத்தியது.

அக்கரைப்பற்று 12 ஆம் பிரிவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடாந்து உரையாற்றுகையில், இன்று வீதிகள் புனரமைக்கபட்டு நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மக்கள் இன்னும் வீதி ஒழுங்கு முறைகளை அறிந்து செயற்படுவதில்லை.

மேலும் போதைப் பொருள் பாவனை, சட்டங்களை மதித்து நடக்காமை, வீதி ஒழுங்கு முறைகளை கடைப் பிடிக்காமை போன்ற காரணங்களினாலேயே அதிகமான வீதி விபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

கடந்த வருடம் இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு 16ம் இடத்தை வகித்துள்ளது. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கடந்த வருடம் மட்டும் 08 பேர் மரணித்துள்ளனர். இந்த வருடம் மார்ச் மாதம் வரையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 04 பேர் பரிதாபகரமாக மரணித்துள்ளனர்.

இவ்வாறாக ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களை அறியும் போது அதிகமானவை போதைப் பொருள் பாவனையாக உள்ளது. மற்றும் மோட்டார் சைக்கிளில் பிரயாணிப்பவர்கள் தலைக்கவசம் அணியாமை, சாரதி பிரயாணத்தின் போது கையடக்க தொலைபேசி பாவிப்பது, வீதி விதி முறைகளை கடைப் பிடிக்காமை, பொறுமையின்மை, அவசரம் போன்ற காரணமாகவே தமது உயிர்களையும், உடமைகளையும் இழக்கின்றனர் என்று கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X