2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உணவு ஒவ்வாமையால் 16 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.எம்.எம்.முர்ஷித்,ரி.எல்.ஜவ்பர்கான்

உணவு ஒவ்வாமையால் சுகவீனமடைந்த 16 பேர் இன்று புதன்கிழமை  காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இளங்கோ தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை  சந்திவெளிப் பிரதேசத்தில் உள்ள சிறிய  ஹோட்டல் ஒன்றிலிருந்து  உணவை வாங்கி உட்கொண்ட 12 பேரே சுகவீனமடைந்துள்ளனர்.

மேற்படி 12 பேரும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தேறிவருவதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, இந்த ஹோட்டலில் உள்ள உணவு மாதிரிகளை  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்; பரிசோதனைக்கு உட்படுத்திவருகின்றனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .