2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

14 வயது சிறுமி மீது 55 வயதான நபர் பாலியல் வல்லுறவு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுகல்சேனையின் பூலாக்காடு பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியை 55 வயதான நபரொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த சிறுமி  வீட்டில் தனிமையிலிருந்த வேளையில்   வீட்டிற்கு வந்த மேற்படி நபர், சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக வாழைச்சேனை  பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சந்தேக நபரை   கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0

  • vaalaiyooraan Saturday, 26 March 2011 12:16 AM

    இந்த கொடுமையை கேட்க யாரும் இல்லையா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .