2026 மே 14, வியாழக்கிழமை

dd

பஸ் குடைசாய்ந்ததினால் 15 பேர் காயம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை எல்லைப்பகுதியில் நேற்று புதன்கிழமை நண்பகல் வேளையில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் குறித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாதையை விட்டுச் விலகிச்சென்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதாகவும் வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .