2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உலக செஞ்சிலுவைச் சங்கத்தின் 151வது தினம்

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல்-சக்திவேல்


உலக செஞ்சிலுவைச் சங்கத்தின் 151வது தினம் வியாழக்கிழமை (8) மட்டக்களப்பிலும் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த தினத்தையொட்டி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் செஞ்சிலுவை இலட்சனை விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில்   மேற்கொள்ளப்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளிலுள்ள மருந்தகங்களுக்கு(பாமசிகளுக்கு) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி கிளைகளின் தொண்டர்கள் நேரடியாக சென்று செஞ்சிலுவைச் இலட்சனை (சின்னம்) தொடர்பாக விளக்கமளித்தனர்.

சர்வதேச ரீதியாக மருந்தகங்களில் (பாமசிகளில்) பாவிக்க வேண்டிய செஞ்சிலுவை இலட்சினை தொடர்பாகவும் தொண்டர்களால் விளக்கமளிக்கப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் ரி.வசந்தராசா மற்றும் அதன் உப தலைவரும், காத்தான்குடி பிரிவின் தலைவருமான எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் வழிகாட்டலிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் இணைப்பாளர் சி.கஜேந்திரன், காத்தான்குடி கிளையின் தொண்டர் பிரிவு இணை;பபாளர் எம்.ஐ.எம்.சலீம் உட்பட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி கிளைகளின் தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது மருந்தகங்களில் (பாமசிகளில்) பாவிக்க வேண்டிய செஞ்சிலுவை இவட்சினையையும் தொண்டர்களால் ஒட்டப்பட்டதுடன் தவறான இலட்சனையை பயன்படுத்த வேண்டாம் எனவும் இதன்போது அறிவுரைகள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X