2025 மே 01, வியாழக்கிழமை

தமிழ்ப் பிரிவு கிராமத்தில் 17 பெண்களுக்கு வாழ்வாதார உதவி

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 27 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐயங்கேணி தமிழ்ப் பிரிவு கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 17 பெண்களுக்கு  தையல் இயந்திரங்களையும்  சிறு கைத்தொழில் உற்பத்திக்கான  காசோலைகளையும்  பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26)  வழங்கினார்.

தலா 22,000 ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்கள் 10 பேருக்கும்  தலா 20,000 ரூபா பெறுமதியுடைய காசோலைகள் 07 பேருக்கும் வழங்கப்பட்டன.

ஹிஜ்ரா நகர் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் ஐயங்கேணி மஜீத் மாவத்தை  கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்;வின் இணைப்பாளருமான எம்.எஸ்.அப்துல் றவூப் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சராகத் தான் இருந்தபோது, ஐயங்கேணி தமிழ்ப் பிரிவு கிராம மக்கள் தையல் இயந்திரங்களை  வழங்குமாறு தன்னிடம் விடுத்த வேண்டுகோள் தற்போது பொருளாதார பிரதியமைச்சராக தான் இருக்கும் சந்தர்ப்பத்தில் நிறைவேற்றப்படுவதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  தெரிவித்தார்.

ஆடு மற்றும் கோழி வளர்ப்பு, சில்லறைக் கடை வியாபாரம் ஆகிய ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்வதற்கு மேற்படி பெண்களுக்கு காசோலைகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .