2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 180,000 பேருக்கு வேலையில்லை: பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

Thipaan   / 2014 நவம்பர் 20 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 180,000 பேர் தொழிலின்றி வாழ்வதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில், கொரிய நாட்டு வைத்தியர்களைக் கொண்ட வைத்திய முகாமின் ஆரம்ப நிகழ்வு  புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் புதன்கிழமை (19) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும்  உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரமொன்றின்படி,  180,000 பேர் தொழிலின்றி வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில், இவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

கடந்த ஐந்து வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய அபிவிருத்திகளை  கண்டுள்ளன. இந்த மாவட்டத்துக்கு 54,000 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ளன.

அந்த வகையில், கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களை இணைத்து பாரிய அபிவிருத்தி செய்யும் மிகப்பெரிய வேலைத்திட்டமும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்காக, 804 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி முழுவதும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

இந்த வருடம்  (2014) சுமார் 5,000 மில்லியன் ரூபாய் நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று, இந்;த மாவட்டத்தி;ல் கடந்த வருடங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களினால்; சேதமடைந்த வீடுகளின் நிர்மாணத்துக்காக 460 மில்லின் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு ,அதன் வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

 வரட்சியால் பெரும்போகச் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல் கொள்வனவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 60 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருந்தொகையான நிதி அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன'  என அவர்  கூறினார்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X