2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாவனைக்குதவாத 20 கிலோ ஆட்டு இறைச்சி மீட்பு

Super User   / 2013 நவம்பர் 03 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத 20 கிலோ ஆட்டு இறைச்சியினை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

காத்தான்குடி பொதுச் சந்தையில் மனித பாவனைக்குதவாத ஆட்டிறைச்சி விற்பனை செய்வதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.றபீக் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.றஹ்மத்துல்லா மற்றும் கே.ஜெய்சங்கர் ஆகியோர் அங்கு சென்று குறித்த ஆட்டிறைச்சிக் கடையில் விற்பணை செய்த ஆட்டிறைச்சியை பரிசோதனை செய்தனர்.

இதன்போது குறித்த ஆட்டிறைச்சி மனித பாவனைக்கு உதவததால் அந்த இறைச்சியை கைப்பற்றினர். சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியாமல் ஆடுகள் அறுக்கப்பட்டு குறித்த இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆட்டிறைச்சியை கைப்பற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குறித்த ஆட்டிறைச்சி கடையின் விற்பனை அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு காத்தான்குடி நகர சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆட்டிறைச்சியினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X