2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

20 மாடுகள் மீட்பு; சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 20 மாடுகளை மட்டக்களப்பு பொலிஸார் மீட்டதுடன்,   லொறியின் சாரதியையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

நேற்று திங்கட்கிழமை பொலன்னறுவையிலிருந்து கல்முனைக்கு மேற்படி 20 மாடுகளையும் கொண்டு சென்றபோதே இந்த மாடுகள் மீட்கப்பட்டன.

மாடுகளை கொண்டு செல்வதற்கான சகல அனுமதிகளையும் பெற்றிருந்தபோதிலும்,  மாடுகள் அசைய முடியாதவாறு  லொறி ஒன்றில் 20 மாடுகளை அடைத்துச் சென்றமையால் மாடுகளை துன்புறுத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் லொறியின் சாரதியை கைதுசெய்ததுடன், மாடுகளையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X