2025 மே 03, சனிக்கிழமை

ஏறாவூரில் 200 நாய்களுக்கு சத்திரசிகிச்சை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர சபைப் பிரிவில் கடந்த 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசர்நாய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், 200 நாய்களுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபைப்; பிரிவில் இந்த விசர்நாய் ஒழிப்பு வேலைத்திட்டம் கடந்த சனிக்கிழமையிலிருந்து  ஆரம்பிக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தது.

ஏறாவூர் நகர சபைத் தலைவர் அலிசாஹீர் மௌலானாவின் முன்னெமாழிவுக்கமைய இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஏறாவூர் நகர சபை மற்றும் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம், சமூக பாதுகாப்பிற்கான விலங்கு நல அமைப்பு ஆகியவைகள் இணைந்து விசர்நாய் ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தன.

ஏறாவூரிலுள்ள திண்மக்கழிவு அகற்றும் பகுதி மற்றும் பொதுச்சந்தை என பல பகுதிகளிலும் நாய்கள் பிடிக்கப்பட்டு இந்தச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு நாய்களை மலடாக்கும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X