Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
இலங்கையின் 64ஆவது சுதந்திரதினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 21 கைதிகள் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
சிறுகுற்றங்கள் இழைத்தவர்களும் சிறுகுற்றங்கள் இழைத்த நிலையில் அபராதம் செலுத்த தவறிய கைதிகளுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் எஸ்.கஜநாயக்க, சிறைச்சாலை பிரதான நலன்புரி அதிகாரி எஸ்சிறினிவாசன், நலன்புரி அதிகாரி ஏ.முபாறக் உள்ளிட்டோர் முன்னிலையில் இக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 57 கைதிகளுக்கு சவர்க்காரம் மற்றும் சுகாதார தேவைகளுக்கான சில பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன. கடந்த ஒரு வருடமாக உறவினர்கள் எவரும் பார்வையிட கைதிகளுக்கே இந்த அன்பளிப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago