2026 மே 09, சனிக்கிழமை

நோன்பை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை முஸ்லிம் ஊழியர்கள் 2.30 மணி வரை வேலை

Super User   / 2013 ஜூன் 28 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபையின் முஸ்லிம் ஊழியர்கள் புனித ரமழான் மாதத்தில் பிற்பகல் 2.30 மணி வரை வேலை செய்ய முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நகர சபையின் மாதாந்த கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது என காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

எனினும் வழமையான கடமை நேரத்திற்கு முஸ்லிம் ஊழியர்கள் சமூகளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பகல் உணவுக்கு வழங்கப்படும் நேரத்தில் முஸ்லிம் ஊழியர்கள் கடமையாற்றி விட்டு பிற்பகல் 2.30 மணிக்கு வீடு செல்ல முடியும் என நகர சபை தலைவர்; தெரிவித்தார்.

எனினும் முஸ்லிம் அல்லாத ஊழியர்கள் வழமை போன்று பிற்பகல் 4.15 மணி வரை கடமையாற்றவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை காத்தான்குடி நகர சபைக்கு கனரக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கும் இந்த கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என எஸ்.எச்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .