2026 மே 07, வியாழக்கிழமை

ரூ. 25 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டிடம் திறப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 12 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், தேவ அச்சுதன்

யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பத்தரைக்கட்டை கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை சிறுவர் நிதியத்தினால் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலைக் கட்டிடம் இன்று காலை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

நியூசிலாந்து நாட்டு நிதி உதவியுடன் இலங்கை சிறுவர் நிதியம் இக்கட்டிடத்தை நிர்மாணித்துள்ளது. நிதியத்தின் இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் எலோனா பிரதம அதிதியாக கலந்து  கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

வவுணதீவு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 25 இலட்;சம் ரூபாய் செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .