2026 மே 07, வியாழக்கிழமை

அருட்தந்தை சந்திரா பெர்ணான்டோவின் 25ஆவது ஆண்டு நினைவு தினம்

Kogilavani   / 2013 ஜூன் 07 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பின் முன்னாள் சமாதனா பேரவை மற்றும் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்;தை சந்திரா பெர்ணான்டோவின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பிலுள்ள புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வையொட்டி விசேட பிராத்தனை நிகழ்வு நடாத்தப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையாவின் தலைமையில் இவருக்கான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் திருகோணமலை மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளர் அருட்தந்தை கலாநிதி நோயல் இம்மானுவல், மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே,துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயலாளர் எஸ்.மாமங்கராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அருட்தந்தை சந்திரா பெர்ணாண்டோவின் நினைவாக அறக்கட்டளை நிதியமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு அதனூடாக புலமைப்பரிசில் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் 'மனிதத்தில் ஒரு புனிதன்' எனும் நினைவு மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

கடந்த 6.6.1988ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் அருட்தந்;தை சந்திரா பெர்ணாண்டோ மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .