2026 மே 09, சனிக்கிழமை

dd

ஆஸி. செல்ல முயன்ற 26 பேர் கைது

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், க.ருத்திரன்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 26 பேரை இராணுவத்தினர் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி கடற்கரையிலிருந்து சட்டவிரேதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் வவுனியா பிரதேசத்தையும் ஆறு பேர் இங்கிரிய பிதேசத்தையும் மூன்று மீகம பிரதேசத்தையும் ஏனையோர் களுவாஞ்சிகுடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இராணவத்தினரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .