2026 மே 06, புதன்கிழமை

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 274 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 18 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்குடாக் கிராமத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 274 வீடுகள் நேற்று சனிக்கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டன.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இவ் வீடுகள்  மீள்குடியேற்ற அமைச்சின் ஒரு கோடி ரூபா நிதியுதவியுடன் வீடமைப்பு அதிகாரசபையின் மேற்பார்வையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன.

வாழைச்சேனை பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இதற்கான  நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணவர்த்தன வீரகோன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எஸ்.பந்துசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கர், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .