2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

களுதாவளையில் 3 டெங்கு நோயாளர்கள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 10 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட களுதாவளைப் பகுதியில் 3 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

களுதாவளைப் பகுதியில் 08ஆம் 09ஆம் திகதிகளில்  டெங்குநுளம்புகளை அழிப்பதற்கான  விசேட நடவடிக்கைகளும் சோதனையும் களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டன.

இதன்;போது, 3 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். டெங்குநுளம்புகள் இருந்த 20 மேற்பட்ட இடங்கள் இனங்கண்டு அழிக்கப்பட்டன.
டெங்குநுளம்புகள் தங்குவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருந்ததாகக் கருதப்படும் 3 நபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,  ஏனையோர் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் இன்று திங்கட்கிழமை (10) அவர் கூறினார்.

டெங்குநோயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.  மக்கள் நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருக்கக்கூடாது. இனிமேலும், இப்பிரதேசத்தில் நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருப்போர் இனங்காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X