2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 30 ஆயிரம் பனங்கன்றுகளை நட திட்டம்

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் 30ஆயிரம் பனங்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.விஜயன் தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் பனை அபிவிருத்தி சபை தலைவரின் அனுசரணையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பனங்கன்றுகள் நடப்படவுள்ளன. கடந்த ஆண்டும் இதேதொகை பனங்கன்றுகள் இம்மாவட்டத்தில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .