2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அமீர்அலி பொது நூலகத்தின் 30 வருட பூர்த்தி

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்;.ஹனீபா


தேசிய வாசிப்பு மாதத்தையிட்டும் சம்மாந்துறை அமீர்அலி பொது நூலகத்தின் 30 வருட பூர்த்தியினையிட்டும் சம்மாந்துறைப் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் புத்தக கண்காட்சியும் விற்பனையும் கலை நிகழ்வுகளும் நேற்று (08) மாலை சம்மாந்துறை அமீர்அலி பொது நூலக வளாகத்தில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றிலிருந்து நான்கு தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வின் இன்றைய ஆரம்ப விழாவின் பிரதம அதிதியாக சம்மாந்துறை அனைத்து பள்ளி பரிபாலன சபையின் புதிய பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், பிரதேச செயலாகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சாh உதவித்தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்களான சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, எம்.ஐ.எம்.றனூஸ், எம்.ஏ.அச்சுமுஹம்மட், மீராமுகைடீன் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா காட்சிக் கூடத்தை திறந்து வைத்தார்.அத்துடன் கிழக்க மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் இலத்திரணியல் நூலகத்தை திறந்து வைத்தார்;.

அதனை தொடர்ந்து சம்மாந்துறை அமீர்அலி பொது நூலகத்தின் 30 வருட ஆண்டு  நிறைவு நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டன அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தின் சிறப்புக்கள் தொடர்பாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக பிரயோக  விஞ்ஞான பீடத்தின் நூலகர் திருமதி மசூஹா ஹனீம் சிறப்புறையாற்றினார்





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X