2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கட்டணம் செலுத்தாத 32 வீடுகளுக்கு மின் துண்டிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் மின்கட்டணம் செலுத்தத் தவறிய 32 வீடுகளுக்கான மின் விநியோகம் நேற்று புதன்கிழமையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் எம்.ஐ.எம்.நௌபர் தெரிவித்தார்.

காத்தான்குடி ராசா ஆலிம் வீதி மற்றும் அதை அண்டிய குறுக்கு வீதிகளிலுள்ள 32 வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மின்சாரக் கட்டணப் பட்டியல் அனுப்பப்பட்டு ஒரு மாதத்திற்குள் அதை செலுத்தத் தவறியவர்கள் மீது இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி  மேற்படி 32 வீடுகளுக்கான மின் கட்டணப் பட்டியல் அனுப்பப்பட்டு ஒரு மாதம் கடந்தும் மின்கட்டணத்தை  செலுத்த தவறியதால் மேற்படி வீடுகளுக்கான  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர்கள் மின்சாரத்தை மீளப் பெறவேண்டுமாயின் மின் கட்டணப் பட்டியலிலுள்ள தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டும் என்பதுடன்,  மீள மின்சாரத்தை பெறுவதற்கான கட்டணமாக 800 ரூபாவும் சேர்த்து செலுத்தப்பட்டால் அவர்களுக்கான மின்சாரம் மீள வழங்கப்படும். 

மேலும், இலங்கை மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் மின் கட்டண பட்டியலை பரிசோதனை செய்யவரும்போது நிலுவையில்லாமல் மின் கட்டணத்தை செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .