2026 மே 09, சனிக்கிழமை

dd

சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் 4 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூன் 20 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4  மீனவர்களை கைதுசெய்த பொலிஸார், இவர்களிடமிருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகளையும்; கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள  நாவலடி கடற்கரையிலேயே இந்த 4 மீனவர்களையும் நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போதே இந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 220 மீற்றர் நீளமான சட்டவிரோத சுருக்கு வலைகளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் சந்தேக நபர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .