2025 மே 01, வியாழக்கிழமை

பேத்தாழையில் 40 வீடுகள் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 02 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


இந்திய வீடமைப்புத் திட்டம் மூலமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாழை கிராமத்தில் வீடுகள் இல்லாமல் வாழ்கின்ற வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மக்களுக்கு 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பேத்தாழை குகநேசன் மண்டபத்தில்  திங்கட்கிழமை  (02) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதற்காக, தற்போது 100 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

பயனாளிகள் தெரிவு தொடர்பான  தீர்மானத்தை, இந்திய வீடமைப்புத் திட்ட உயர்மட்டக் குழுவினர் கிடைத்த  விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முடிவெடுப்பார்கள். இவர்களின் தெரிவு சரியான தெரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதித் தீர்மானமாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். 

இந்த  நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளதாகக் கூறிய அவர்,  இவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கக் கூடாதெனவும் கேட்டுக்கொண்டார்.  பயனாளிகள் தெரிவில்  பொருத்தமானவர்களை தெரிவுசெய்வதே இவர்களின் கடைமையாகுமெனவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரி.தினேஸ்,  திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தேவாகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .