2026 மே 06, புதன்கிழமை

மினி சூறாவளியினால் 40 வீடுகள் சேதம்

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில், நேற்று முன்தினம் வீசிய சுழல் காற்றுக்காரணமாக 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 1வீடு முழுமைகாயகவும் 21 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதுடன் இப்பிரதேசத்தில் 9 பொதுக்கட்டிடங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அதேபோன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சேதவிபரங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்சின் அறிவுறுத்தலின் பேரில் திரட்டப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .