2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி பிரதேசத்தில் 40 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த இரண்டு மாதங்களில் காத்தான்குடி பிரதேசத்தில் 40 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடியில் டெங்கு விழிப்புனர்வு வேலைத்திட்டத்தினை நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்துரையாற்றிய காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 40 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அன்மையில்; பெய்த மழையினால் நமது பிரதேச்தில் மேலும் டெங்கு நுளம்புகள் அதிகரிக்கலாமென அச்சம் காணப்டுகின்றது இதற்காக டெங்கு பரிசோதனை நடவடிக்கையும் மற்றும் டெங்கு விழிப்புனர்வு வேலைத்திட்டமும் மேற் கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த வேலைத்திட்டத்தினை இன்று நாம் மேற் கொள்கின்றோம்.

பிள்ளைகளுக்கு காய்ச்சல் ஏற்படுமாயின் அவதானமாக இருக்க வேண்டும் காய்ச்சலுடன் பிள்ளைகளை பாடசாலைக்கு மற்றும் ரியூசன் வகுப்புக்களுக்கு, மற்றும் குர்ஆன் மதரசாக்களுக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மழை பெய்தால் மழை நீர்; தேங்கி காணப்படுகின்ற டயர்கள், சிரட்டைகள் போன்ற வற்றை அப்புறப்படுத்தி விடுவதுடன் டெங்கு நுளம்பு வரக்கூடிய சூழலை நாம் வைத்திருக்க கூடாது.

பாடசலைகள் மற்றும் ரியூசன் வகுப்புக்கள், குர்ஆன் மதரசாக்கள் சிறுவர்கள், மாணவர்கள் ஒன்று கூடும் இடங்கள் எதுவாக இருந்தாலும் டெங்கு சூழில்லாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா, காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.சுபைர் உட்பட அதிபர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோதக்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X