2026 மே 14, வியாழக்கிழமை

'மட்டக்களப்பில் 42 வீதமானோர் ஆரம்ப பிரிவுடன் கல்வியை கைவிடுகின்றனர்'

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் ஆண்டில் இணைந்து கொள்ளும் மாணவர்களில் 42 சதவீதமான மாணவர்கள் ஆறாம் ஆண்டிற்காக பாடசாலைக்கு வருவதில்லை. அவர்கள் ஆரம்பபிரிவுடன் கல்வியை கைவிட்டு விடுகின்றனர் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

அதிகமான பாடசாலைகளில் ஆறாம் ஆண்டிற்குரிய வகுப்புகள் இன்மையால் 25 அல்லது 30 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பாடசாலைகளுக்கு செல்வது கடினம் என்பதால் கல்வியை இடை நடுவில் நிறுத்தி விடுகின்றனர் என்று அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யுத்தத்தின் பின்னர் சிவில் நிர்வாகத்தை நோக்கிய பயணத்தில்  அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இம்மாவட்டம் வறுமை நிலையிலிருந்து நீங்கவேண்டுமானால் அதற்காக அரச உத்தியோகத்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.

பல தடைகளைத் தாண்டி சவால்களுக்கு முகம்கொடுக்கும் அரச ஊழியர்களுக்கு பக்க பலமாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இருப்பது மகிழ்ச்சி தருகின்றது.

முன்னாள் முதலமைச்சர் இம்மாவட்த்தின் அபிவிருத்திக்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்குபவர். பக்கபலமாக இருந்து எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமாக இருப்பதால் இம்மாவட்ட அபிவிருத்திக்கு அவரால் கணிசமான பங்களிப்பை செய்யமுடிகின்றது. இம்மாவட்டத்திலிருந்து வறுமையை ஒழிப்பதிலும் அவரது பங்களிப்யுபு அவசியம்.

இம்மாவட்டத்தில் நியமனம் பெற்ற பல ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்வதற்கான தீர்வுகளையும் காணவேண்டியுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .