Kogilavani / 2012 மார்ச் 17 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூறையடி சூரியபுரம் கிராமத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட 44 வீடுகள் நேற்று வெள்ளிக்கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டன.
சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இக் குடும்பங்களுக்கு பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் ஏற்பாட்டில் சுமார் பத்து மில்லியன் ரூபா செலவில் இவ்வீடுகள் புனரமைத்து கொடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
வீடுகள் கையளிக்கும் நிகழ்வில், மீள் குடியயேற்ற அமைச்சர் குணவர்த்தன வீரகோன், பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக இவ்வீடுகளை கையளித்தனர்.
இந்த வைபவத்தில் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எஸ்.பந்துசேன, மற்றும் உதவிச் செயலாளர் திருமதி வை.தவஈஸ்வரி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் பிரிவு தலைவியுமான திருமதி உருத்திரமலர் ஞான பாஸ்கரன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட அமைச்சின் பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திகிலிவெட்டை கிராமத்திலும் யுத்தம்
காரணமாக முற்றாக சேதமடைந்த 50 வீடுகள் புனரமைப்புச் செய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டன. (படங்கள் :-சுக்ரி)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
10 minute ago
24 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
41 minute ago