2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 45.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 20 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை (19) காலை 8.30 மணியிலிருந்து வியாழக்கிழமை (20) காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 45.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், மாவட்டத்தின்; நவகிரிப் பிரதேசத்தில்;  61.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் தும்பங்கேணிப் பிரதேசத்தில் 72.3  மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் வாகனேரி பிரதேசத்தில் 50.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் 16.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் உன்னிச்சைப் பிரதேசத்தில் 40.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் உறுகாமம் பிரதேசத்தில் 68.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் மயிலம்பாவெளிப் பிரதேசத்தில் 32.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பாசிக்குடாப் பிரதேசத்தில் 61.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்வதால் அவ்வீதியை  பயன்படுத்தும் பிரயாணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X