2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் 5ஆம் குறிச்சி கிராமத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்

Kogilavani   / 2012 மே 31 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, ஏறாவூர் 5ஆம் குறிச்சி கிராமத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்குள்ள மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடல், ஏறாவூர் 5ஆம் குறிச்சி சனசமூக அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாதர் சங்க பிரதிநிகளும் ஏற்பாட்டில் வாசிக சாலை கட்டிடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கிராம மக்களின் வாழ்வாதாரம் குறித்து விசேடமாக கலந்துரையாடியதுடன் அவர்களுக்கான தொழில் முயற்சிக்கான உதவிகளையும் உடனடியாக வழங்கி வைத்தார்.

இதேவேளை, இக்கிராமத்திற்கான விளையாட்டு மைதானத்தின் தேவை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து  மைதானம் அமைப்பதற்கான இடத்தையும் முதல்வர் பார்வையிட்டார்.

குறித்த கிராத்தில் அடையாளாம் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்து தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளரும் செங்கலடி வர்த்தக சங்கத்;தின் தலைவருமான க.மோகனும் கலந்து கொண்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .