2026 மே 09, சனிக்கிழமை

அமரர் ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜின் 5ஆவது ஆண்டு நினைவு தினம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 23 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்,  எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் அமரர் ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 5ஆவது ஆண்டு நினைவு தினம், இந்து இளைஞர் பேரவை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் மட்டு. நகரிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அமெரிக்க  தூதுவரலாயத்தின் அரசியல் பிரிவின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், பேரவை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர் ச.சிவபாதசுந்தரம், புளியந்தீவு சித்திரவேலாயு சுவாமி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.முறசொளிமாறன் குருக்கள் ஆகியோரால் மலர்மாலை சூட்டப்பட்டது. பின்னர் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் தூதுவரலாயத்தின் அரசியல் பிரிவின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அரசியல் அதிகாரி சந்தீப் குரூஸ், மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்களான ச.சிவபாதசுந்தரம், த.கிரிதராஜா, என்.ஜெகதீசன், புளியந்தீவு சித்திரவேலாயு சுவாமி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.முறசொளிமாறன், அரசடிப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சா.ராமதாஸ் குருக்கள், கிழக்கு இந்து ஒன்றிய செயலாளர் கதிர் பாரதிதாசன், மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எழில்வாணி பத்மகுமார், பேரவையின் பிரதி நிதிகள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு கணவனை இழந்தவர்களுக்கு சுயதொழிலுக்கு பண உதவி வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .