2025 மே 01, வியாழக்கிழமை

நொச்சிமுனை கருமாரியம்மன் ஆலயத்திற்கு 50 பேர்ச் காணியை பெற்றுத்தருவதாக உறுதி

Kogilavani   / 2014 ஜனவரி 27 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, நொச்சிமுனை பிரதேசத்திலுள்ள கருமாரியம்மன் ஆலயத்திற்கு 50 பேர்ச் காணியை பெற்றுத்தருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை (27) ஆலய நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

ஆலய நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் நொச்சிமுனைக்கு ஞாயிற்றுக்கிழமை (27) விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சரிடம் நொச்சிமுனை கருமாரியம்மன் ஆலயத்திற்கான காணிப்பிரச்சினை தொடர்பாகவும் ஆலயத்திற்கான காணியை பெற்றுத்தருமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

'இந்த ஆலயத்திற்கு தற்போது 25 பேர்ச் காணி உள்ளது. அதனை 50 பேர்ச் காணியாக பெற்றுத்தர வேண்டும். இந்த ஆலயம் அமைந்துள்ள காணி, தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான காணியென அடையாளப்படுத்தப்பட்டு தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையினால் காணி சுற்று மதில் கடந்த 10 நாட்களாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது' என ஆலய நிர்வாகத்தினர் இதன்போது பிரதியமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

இந்த சுற்றுமதில் நிர்மாணிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தி ஆலயத்திற்கான காணியினை வழங்கிய பின்னர் சுற்றுமதிலை நிர்மாணிக்குமாறு தேசிய நீர்வழங்க வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளுக்கு பிரதியமைச்சர் முரளிதரன் இதன்போது உத்தரவிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக நீர் வழங்கள் அமைச்சருடன் கலந்துரையாடி இதற்கு தீர்வினை பெற்று ஆலயத்திற்கான காணியினை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதியைமச்சர் முரளிதரன் இதன்போது உறுதியளித்தார்.

இச்சந்திப்பில், பிரதியமைச்சருடன் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் மற்றும் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட ஆலய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .