2026 மே 07, வியாழக்கிழமை

கோறளைப்பற்றில் 51 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் 51 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டதுடன், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அலுவலகத்தின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர் தெரிவித்தார்.

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, செம்மண்னோடை, மாவடிச்சேனை போன்ற பகுதிகளில் கடந்த  ஜனவரி மாதத்திலிருந்து ஜுன் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க  வாழைச்சேனை பொலிஸ், வாழைச்சேனை பிரதேச சபை, கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சிரமதானப்பணி மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும், டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருப்போருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .