2026 மே 06, புதன்கிழமை

கல்குடா வலயத்தில் 6 பாடசாலை மாணவர்கள் தரையிலிருந்தே கற்கை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள 6 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தரையில் உட்கார்ந்திருந்தவாறே கல்வி கற்பதாக கல்குடா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்தில் உள்ள வாகரை, கிரான்,  செங்கலடி ஆகிய கல்விக் கோட்டங்களில் 83 பாடசாலைகள் உள்ளன. இவற்றில்  6 பாடசாலைகளில் தளபாட வசதி இல்லாதினால் இந்தப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தரையில் உட்கார்ந்திருந்தவாறே கல்வி கற்பதாகவும் அவர் கூறினார்.

முறக்கொட்டாஞ்சேனை இராம கிருஷ்ணமிஷன் வித்தியாயலம், செங்கலடி விவேகானந்தா வித்தியாலயம், கல்குடா நாமகள் வித்தியாலயம், வம்மிவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மாங்கேனி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய 6 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே தரையில் உட்கார்ந்திருந்தவாறு கல்வி கற்கின்றனர்.

மேலும், இந்த 6 பாடசாலைகளிலும் குடிநீர் வசதியோ அல்லது கிணற்று வசதியோ இல்லை. இதிலும் சில பாடசாலைகளில் மலசலகூட வசதியும் இல்லை எனவும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.  இதனால் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார். 

இந்த 6 பாடசாலைகளுக்கு மேற்படி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான உதவியை அரசாங்கத்திடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் கோரியுள்ளதாகவும் கல்குடா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .