2025 மே 01, வியாழக்கிழமை

காணாமல் போன 62 பேரின் விபரங்கள் அனுப்பிவைப்பு: செல்வேந்திரன்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 11 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காணாமல் போனோர் தொடர்பான 62 பேரின் விபரங்களை காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகம் பதிவுத் தபாலில் அனுப்பிவைத்துள்ளதாக  இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு இதுரைவயில் 62 முறைப்பாடுகள் கிடைத்தன.

முதல் தடவையாக காணாமல் போன 30 பேரின் விபரங்களையும்  இரண்டாவது தடவையாக 20 பேரின் விபரங்களையும் மூன்றாவது தடவையாக 12 பேரின் விபரங்களையும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு, காணாமல் போனோர் பற்றிய விபரங்களை பெறுவதற்கு வழங்கப்பட்ட காலஎல்லை போதாமையால் அதை நீடிக்குமாறு இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகம்  கோரிக்கை  விடுத்தது.

இந்தக் கோரிக்கையை அடுத்து இதற்கான  காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த நிலையில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின்  முக்கியஸ்தர்கள் சென்று காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்  அந்த விபரங்களை காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .