2025 மே 02, வெள்ளிக்கிழமை

அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜாவின் 64ஆவது ஜனன தினம்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர்.சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 64வது ஜனன தின நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இவ் ஜனன தின நிகழ்வு இடம்பெற்றது. 

அமெரிக்க நாட்டின் இந்து சமய துறவியாக இருந்து இலங்கை மண்ணில் இந்து சமயத்தை வளம்படுத்தியவரும், எமது கோணேச பூமியிலே சமாதி அடைந்தவரும், இலங்கை இந்து சமய அபிவிருத்தி சபையின் தலைவருமான அமரத்துவமடைந்த ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 64வது ஜனன தின நிகழ்வையொட்டி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள சுவாமியில் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு தாமரைக்கேணி மங்கையற்கரசியார் மகளீர் இல்ல கட்டடத்தில் அவரது ஜனன தின சிறப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன், சிவானந்தா தேசிய பாடசாலை பிரதி அதிபர் க.சுலர்ணேஸ்வரன், கோட்டமுனை அரசடிப் பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சா.ராதமாஸ் குருக்கள், தாமரைக்கேணி மகமாரியம்மன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.எஸ்.குமாரதாஸ், சைவப்புலவர் திருமதி.சிவானந்தி ஞானசூரியம், மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்க உறுப்பினர்கள், பேரவையின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன், சிவானந்தா தேசிய பாடசாலை பிரதி அதிபர் க.சுலர்ணேஸ்வரன், தாமரைக்கேணி மகமாரியம்மன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.எஸ்.குமாரதாஸ், சைவப்புலவர் திருமதி.சிவானந்தி ஞானசூரியம் ஆகியோரால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

இதன்போது கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன் சிறப்பு உரையராற்றும் போது சுவாமி விபுலானந்தர் சமயத்திற்கு செய்த பணிக்கு அடுத்தாக ஆன்மீகப் பணியில் தலைநிமிர்ந்து நின்றவர் அமரர்.சுவாமி தந்திரதேவா மகராஜ். இவரின் நினைவான மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக சுவாமியில் திருவுருவச் சிலை தாபிக்கப்பட்டமை சார்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து மக்கள் பெருமை கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர் என சுட்டிக்காட்டினார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X