2025 மே 02, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி பணிகளுக்காக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 48 கிராம சேவக பிரிவுகளிலும் அபிவிருத்தி பணிகளுக்காக 68 மில்லியன் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், ஞாயிற்றுக்கிழமை (2) தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமிய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்றது.

ஒவ்வொரு வட்டாரங்களிலுமுள்ள வதிவிட பிரதிநிதிகளால் வீதி புனரமைப்பு, வடிகான்கள் அமைத்தல், பல்தேவைக்கட்டிடம் அமைத்தல், சுகாதாரப் பராமரிப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டபோது முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்து தருவதாக சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவிகள் உட்பட பலர் கலந்துகொண்டு தங்களது பிரதேச பிரச்சினைகளை முன்வைத்தனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜேதீஸ்குமார், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம். சிவராசா ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .