2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

செட்டிபாளையத்தில் 7 டெங்கு நோயாளர்கள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 17 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தில் கடந்த இரு வாரங்களினுள் 07 டெங்கு நோயாளர்கள் அடையாளம்; காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.

மேலும், டெங்கு நுளம்பு பரவும் இடங்களை வைத்திருந்ததாக கூறப்படும் 20 குடும்பங்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன்,  04 குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

செட்டிபாளையம் கிராமத்தில் டெங்கு நுளம்புகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் திடீர் விழிப்புணர்வு  நிகழ்வு செட்டிபாளையம் பாடசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நடைபெற்றது. இதன்போது அவர் இதைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 31 டெங்கு  நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இதில் அதிகமாக செட்டிபாளையம் கிராமத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.  தற்போதைய நிலையில்; செட்டிபாளையம் கிராமத்தில் சாதாரணமாக டெங்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் பொதுமக்கள்  மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். நுளம்புகள் பரவும் இடங்களை  தவிப்பதற்கான நடவடிக்கைகளை  பொதுமக்கள்  மேற்கொள்ள வேண்டும். மக்கள் பாவித்துவிட்டு வீசும் கழிவுப்பொருட்களிலிருந்தே நுளம்புகள் அதிகமாக பரவுகின்றன' எனவும் அவர் கூறினார்.

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்;புணர்வு நிகழ்வில் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால்;, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.திருச்செல்வம்,  பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களும்; கலந்து கொண்டனர்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X