2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தடைசெய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு – சொறுவாமுனை, விளாவெட்டுவான் வாவியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேருக்கும் தலா 2,000 ரூபாய் படி  ஏறாவூர் சுற்றுலா நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தண்டம் விதித்தார்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேரும் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனர். இதன்போது 08  தோணிகளும் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கூஸ் வலைகளும் கைப்பற்றப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட் தெரிவித்தார்

இந்த நிலையில், சட்டவிரோத வலைகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது வாவி இரகசிய கண்காணிப்பு பிரிவினரும் சட்டபூர்வமான  மீன்பிடியில் ஈடுபடும் மீனவர் சங்கங்களும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ்ஜின்; பணிப்பின் பேரில் சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் திடீர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

நேற்றைய சுற்றிவளைப்பின்போது மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட், கடற்றொழில் பரிசோதகர்களான ரீ.பாலமுருகன், வி.மனோகரன் ஆகியோருடன் மீனவர் சங்கங்களும் ஈடுபட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X