2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஜோசப் பரராசசிங்கத்தின் 7ஆம் ஆண்டு நினைவுதினம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார், எம்.சுக்ரி)


2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 7ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்ற மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொகுதித் தலைவர் பரமானந்தம் தலைமையில் மட்டக்களப்பு நல்லையா வீதியல் உள்ள தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நினைவுதின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்ததுடன் நாடபளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்  மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

இந்த நினைவுதின நிகழ்வில் நினைவுப் பேருரையினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி கி.துரைராசசிங்கம் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை பிரசன்னா இந்திரகுமார், மா.நடராசா மற்றும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் மாகாண சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X